தம்மம்பட்டி சந்தைரோட்டில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு

தம்மம்பட்டி, செப்.19:தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 35ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக, மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தம்மம்பட்டி சந்தைரோட்டில் செல்லும் குடிநீர் குழாயில், கடந்த சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி சாக்கடையில் கலந்து வருகிறது. இது குறித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் மக்கள் பல முறை புகார் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடைப்பின் வழியாக வெளியேறும் தண்ணீரை மக்கள் குடங்களில் பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: