ஆதனப்பட்டு கிராமத்தில் சேதமடைந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு

வானூர், செப். 19:  வானூர் தாலுகா ஆதனப்பட்டு கிராமத்தில் சாலை வசதியின்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்த கிராமத்தில் 8க்கும் மேற்பட்ட சாலையில் உள்ள இப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மற்ற பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக இருப்பது ராஜவீதி. முதலில் சிமெண்ட் சாலையான இருந்த இந்த சாலை சேதமாகி முற்றிலும் மண் சாலையாக மாறி அதில் இருந்து மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலையில் தேங்கி நிற்பதுமாக இருந்து வந்தது. தற்போது பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த சாலையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், வானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுரேஷ்குமார், நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையை தற்காலிகமாக கிராவல் மண் அடித்து மேம்படுத்தினார்கள். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: