குட்கா லஞ்ச வழக்கில் அமைச்சர், டிஜிபி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன்?

விழுப்புரம், செப். 19:  தமிழகத்தில் நடந்த குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வேண்டும், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வரவேற்றார்.  ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்எல்ஏ பேசுகையில், தமிழக அரசு ஊழலில் ஒட்டுமொத்தமாக மூழ்கியுள்ளது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

தற்போது நடந்த குட்கா ஊழல் புகாரில் சிபிஐ வெறும் சோதனையோடு முடித்துவிட்டது. ரெய்டை காரணம் காட்டி அவர்களை மிரட்டி வைக்கின்றனர். சோதனையைத் தொடர்ந்து அமைச்சர், டிஜிபி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வரும் சட்டமன்றத்தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட அதிமுக வெற்றிபெறாத சூழ்நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது என்றார். மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், ஸ்டாலின் நற்பணிமன்ற தலைவர் கவுதமசிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, வேம்பிரவி, ஜெயரவிதுரை, வசந்தவேல், வழக்கறிஞர் சுவைசுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், பொறியாளர் அணி இளங்கோ, நகர நிர்வாகிகள் சக்கரை, புருஷோத்தமன், தாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: