விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்: 6 பேர் அதிரடி கைது

திருக்கோவிலூர், செப். 19:  திருக்கோவிலூர் அடுத்த கீழக்கொண்டூர் கிராமத்தில், சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தரப்பினர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கோஷமிட்டபடி ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கலுவராயன் வீட்டருகே சென்றபோது அவர் அமைதியாக விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஜெயச்சந்திரன் தரப்பினருக்கும், கலுவராயன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துக்கொண்டனர். இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன், கலுவராயன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும், கலுவராயன் மகள் தேவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கலுவராயன் கொடுத்த புகாரின் பேரில் பூங்கான் மகன் அன்பழகன்(26), ரோமியோ மகன் தமிழ்மணி(29), முனியன் மகன்கள் சுரேஷ்குமார்(29), ஜெயச்சந்திரன்(35) ஆகிய 4 பேர் மீதும், ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஏர்னஸ்ட் குருசாமி மகன்கள் தமிழரசன்(23), அன்பரசு(21), மனைவி விஜயா, ஏர்னஸ்ட்குருசாமி(48) ஆகிய 4 பேர் மீதும் தனித்தனியாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் அன்பழகன், தமிழ்மணி, சுரேஷ்குமார் மற்றும் தமிழரசன், அன்பரசு, ஏர்னஸ்ட்குருசாமி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: