கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி ரத ஊர்வலம்

கோவில்பட்டி, செப்.19: கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐந்தொழிலாளர்கள் தொடர்பான ரத ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விஸ்வேஸ்வர விநாயகர் கோயிலில் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜைகளும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு விஸ்வகர்மா உருவபடத்துடன் ஐந்தொழிலாளர்கள், ஐந்தொழில்கள் தொடர்பான ரத ஊர்வலம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு விஸ்வகர்ம ஜெயந்தி விழாக்குழு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். விழா குழுவை சேர்ந்த பாலமுருகேசன், ராமச்சந்திரன், முருகன் முன்னிலை வகித்தனர்.

 ரத ஊர்வலத்தை சென்னை கூட்டுறவு நூற்பாலை இணை இயக்குநர் சாரதிசுப்புராஜ், பால்சாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரத ஊர்வலம், பள்ளி முன்பு நிறைவுபெற்றது. இதையடுத்து நடந்த விஸ்வகர்ம ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர்ராஜூ உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது.

விழாவில் விஸ்வகர்ம சமுதாய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி விஸ்வகர்ம சமுதாயத்தினர் செய்திருந்தனர். 

Related Stories: