மண்டல விளையாட்டு போட்டி மங்களகிரி ஜோசப் பள்ளி வெற்றி

புதுக்கோட்டை, செப். 19:  சாயர்புரத்தில் மண்டல விளையாட்டுப்  போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை அருகேயுள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப்  மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் குழு போட்டிகளிலும் பல்வேறு போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்றனர். குறிப்பாக ஹாக்கி,  இறகுப்பந்து, பூப்பந்து, கோ கோ, கால்பந்து, தடகள போட்டிகளிலும், 80 மீ  தடை தாண்டி ஓட்டம், 100 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல், மும்முறை  தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் முதல் மற்றும் 2ம் இடங்களை வென்றனர். சாதனை படைத்த இவர்களையும்,  பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜ் மற்றும் பிரியாவையும் பள்ளித் தாளாளரும் முதல்வருமான பங்குத்தந்தை ரூபர்ட் பாராட்டினார்.

Related Stories: