×

மாதந்தோறும் 2,165 பராமரிப்பு செலவாக தமிழக அரசு வழங்குகிறது கால்வாயில் மீட்கப்பட்ட குழந்தை சமூக நலத்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்படைத்தார். சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை சின்னத்திரை நடிகை கீதா என்பவரால் மீட்கப்பட்டது. பின்னர், அந்த குழந்தைக்கு சின்னப்போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டது. தற்போது சராசரி எடையுடன் அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது.

இருப்பினும், தொடர் பாதுகாப்புக்காக அந்த குழந்தையை சமூக நலத்துறை வசம் ஒப்படைக்க திட்டமிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம்  நேற்று குழந்தையை ஒப்படைத்தார். அந்த குழந்தை சமூக பாதுகாப்புத் துறை குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், குழந்தைக்கு தேவையான தாய்ப்பால், தினமும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கி மூலம் வழங்கப்படும். இந்த குழந்தையின் பாராமரிப்பிற்காக மாதம்தோறும் தமிழக அரசு மூலம் 2,165 வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் ெதரிவித்தனர். இந்த நிகழ்வின்போது சுகாதாரத்துறை உயரதிகாரிகள், சமூக பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...