தேசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை உதவித்தொகை வழங்கல்

தூத்துக்குடி, செப். 19: தேசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை உதவித்தொகை வழங்கியது.  மத்தியபிரதேச மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய சீனியர் டேக்வாண்டோ போட்டி விரைவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம், தூத்துக்குடியில் நடந்தது. பயிற்சி முகாமில் பங்கேற்ற 20 பேர்களில் 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த குழுவை சேர்ந்த 20 பேருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இணை துணைத்தலைவர் சுமதி, வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு போட்டியில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.

அப்போது அவர், தேசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று தேசிய அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். இது தான் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நோக்கம். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடி மக்களுக்கு உதவிகள் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

 முகாமில் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச்செயலாளர் பாஸ்கர், வின்னர் கிளப் தலைவர் சண்முகராஜ், துணை தலைவர் மாணிக்கம், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் மேலாளர்கள் நாகராஜ்  முகுந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: