தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணைய நீதிபதி மீண்டும் விசாரணை

தூத்துக்குடி,செப்.19:தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்றும் 7 பேரிடம் ஒருநபர் கமிஷன் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அவர் கடந்த ஜூன் 4ம்தேதி தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 24 பேரிடம் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மீண்டும் 4வது கட்டமாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் 4 நாட்கள் விசாரணை நடத்துகிறார். அவர், நேற்று 2வது பகுதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணையை தொடங்கினார். இதில் நேற்று ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை அவர் விசாரணை நடத்துகிறார்.

Related Stories: