திருவையாறு, தி.பள்ளியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவையாறு, செப். 18:  திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்ற நடந்தது. பின்னர் காவிரி ஆற்றில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. திருவையாறு பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. அதன்படி திருப்பத்துருத்தியில் சிவக்குமார், கண்டியூரில் வேலுச்சாமி, செங்கமேட்டில் கோவிந்தராஜ், ஆவிக்கரையில் இளங்கோவன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதேபோல் கல்யாணபுரத்தில் திலகர், நடுப்படுகையில் ரவிச்சந்திரன் தலைமையிலும்  விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திருவையாறு வந்தது.  அம்மாள் கிராமத்தில் சத்தியராஜ் தலைமையிலும், திருவையாறு அந்தணகுறிச்சியில் அருண் தலைமையில் புறப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பின்னர் திருவையாறு காவிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை டிஐஜி உலகநாதன், எஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி உட்பட 100க்கு மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

விநாயகர் ஊர்வலத்தையொட்டி திருப்பூந்துருத்தி, கண்டியூர், முகமதுபந்தர், நடுக்கடை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் முன்பாக 20வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 13ம் தேதி 12 அடி உயரமுள்ள காவேரி தந்த விவசாய விநாயகர் சிலை அமைக்கப்பட்டு விழா துவங்கியது. 17ம் தேதி வரை காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேலுராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி நகர இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஜெயராமன், நாராயணசாமி ஆகியோர் விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். கோயில் செயல் அலுவலர் விமலா, அக்னீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், ஜெயராமன், செயலாளர்கள் பாண்டித்துரை, பாலசுந்தரம், மகேஷ், ஆலோசகர் ஜெயகுமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு நகரின் பிரதான வீதிகள் வழியாக காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

Related Stories: