துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன்கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

துவரங்குறிச்சி, செப்.18: துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா, பொன்னூஞ்சல் விழா ஆகிய திருவிழாக்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று (17ம்தேதி) பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி வருகிற அக்டோபர் 4ம்தேதி வரை நடைபெறும். திருவிழாவில் முதல் நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று மாலை தொடங்கியது 5 மணிக்கு நாட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பூத்தட்டுகளை ஏந்தி மேள தாளங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனர் அதனைத் தொடர்ந்து இரவு முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று (செவ்வாய்கிழமை) காப்பு கட்டுதல் நடைபெறும். அதன் பிறகு புரட்டாசி 9ம்தேதி (25ம்தேதி) முதல் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி நடைபெறும் மண்டகப்படியின்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். அதன் பிறகு புரட்டாசி 16ம் தேதி (அக்டோபர் 2ம்தேதி) செவ்வாய்கிழமை  இரவு திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் விழா நடைபெறும் மறுநாள் (அக்டோபர் 3ம்தேதி) பகல் பொங்கல் விழா நடைபெறும். இரவு விடையாற்றி நிகழ்ச்சியான காப்பு களைதல் விழா நடைபெறும்.

Related Stories: