பள்ளிகளின் அருகில் கடைகளில் விற்கப்படும் பாப்-பாப் வெங்காய வெடி

ரங்கம், செப்.18: ரங்கத்தில் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் பாப் பாப் வெங்காய வெடிவிற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை மற்றும் கோயில்விழாக்களின்போது பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்த பட்டாசுகள் அரசு அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் வெங்காய வெடி இருந்தது. இந்த வெடியை கைகளால் தரையிலோ, அல்லது சுவர்களிலோ அடித்தால் வெடிக்கும். மேலும் இந்த வெடி அதிக அழுத்தம் இருந்தாலே வெடித்து விடும். இதனால் இந்த வெடி, ஆபத்தானது எனக்கூறி தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்தது. ஆனாலும் இந்த வெங்காய வெடி ஆங்காங்கே ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.  இந்த ஆபத் தனான வெங்காய வெடி திருச்சி ரங்கத்தில் உள்ள மூலத்தோப்பு, கீழவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது பாப் பாப் என்ற பெயரில் பெட்டிகடைகளிலேயே அதுவும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் பள்ளிகள் முன்பு உள்ள கடைகளில் தான் அதிகளவில் விற்கப்படுகிறது.

ஒது ஒரு சிறிய பெட்டியில் இருந்து வெங்காயம் போன்ற சிறிய அளவிலான இருக்கும் பட்டாசு. இதனை கையில் வைத்து சிறுவர்கள் வெடித்து வருகின்றனர். பழைய வெங்காய வெடியில் வெடி மருந்து அதிகம் வைக்கப்பட்டிருக்கும். அதனால் அதை தரையில் வீசி வெடிக்கும் போது சத்தமும் அதிகமாக இருக்கும்.  இந்த புதிய வெங்காய வெடியான பாப்-பாப் வெடி அளவில் மிக சிறியது. அதனால் சிறுவர்கள் இந்த பாப் - பாப் வெடிகளை அதிக அளவில் வாங்கி தரையில் வீசி வெடித்து வருகின்றனர். மேலும் இந்த வெடியை சாலைகளில் செல்வோர் மீதும், குறிப்பாக இளம் பெண்கள் மீது வாலிபர்களும், பள்ளி மாணவர்களும் வீசி வெடிக்கச் செய்கின்றனர். இதனால் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெடியை வீசிய பள்ளி மாணவர்களின் உறவினர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த பாப் - பாப் என்கிற நவீன வெங்காய வெடி அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்த பாப் - பாப் வெடி பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெங்காய வெடியாக உருமாறி அசம்பாவிதம் ஏற்படும்முன்னர் அதிகாரிகள் தடுக்க வேண்டும். மேலும் பெண்களை அச்சுறுத்தும் வெடியாக வந்துள்ள பாப் பாப் வெடிகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்னர்.

Related Stories: