திண்டுக்கல் ஜி.ஹெச்சில் தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிப்பு

திண்டுக்கல், செப். 18: உலகளவில் ஆண்டிற்கு தற்கொலை செய்பவர்கள் 8 லட்சம் பேர். இந்திய அளவில் 1 லட்சம் பேர். இதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக உலக தற்கொலை தடுப்பு தினம் செப்.10ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒருவாரம் அனைத்து மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி தலைமையில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். உளவியல் நிபுணர் விக்னேஷ் தற்கொலை தடுப்பு பற்றி எடுத்துரைத்தார். இதில் நலப்பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: