தலைமை செயலகத்திற்கு ஜெய்ஹிந்த் செண்பகராமன் பெயர் சூட்ட வேண்டும்

திண்டுக்கல், செப். 18: தலைமை செயலகத்திற்கு ஆங்கிலேயர் பெயரான செயின்ட்ஜார்ஜ் கோட்டை என்று உள்ளது. இவற்றை மாற்றி ஜெய்ஹிந்த் செண்பகராமன் பெயர் சூட்ட வேண்டும் என்று காமராஜர்- சிவாஜி பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திண்டுக்கல்லில் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் ஜெய்ஹிந்த் செண்பகராமன், வினோபா பாவே ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, மாநகரத் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வரவேற்க, ஆலோசகர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு ஆங்கிலேயர் பெயரான செயின்ட்ஜார்ஜ் கோட்டை என்று உள்ளது. இவற்றை மாற்றி சுதந்திர போராட்ட தியாகி ஜெய்ஹிந்த் செண்பகராமன் பெயர் சூட்ட வேண்டும். பூமிதான இயக்கத்தலைவர் வினோபா பாவே பிறந்ததினத்தை மண்கொடை தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து பாரதியாரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது, பாரதிக்கு மகாதேசிய கவி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: