தமிழ்ச்சமுதாயம், மொழியை காப்பாற்ற போராட்ட களம் காணும் தலைவரை வரவேற்க திரள்வீர்

சேலம், செப்.18: திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாற்று சிறப்பு மிக்க திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்ேபற்ற தளபதி மு.க.ஸ்டாலின், ஆளுகின்ற மக்கள் விரோத, கொத்தடிமை அதிமுக ஆட்சியில் புரையோடிப்போன ஊழலை எதிர்த்து, களம் காண சேலம் வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் தமிழ் சமுதாயத்திற்கு வாராது வந்த மாமணியாக, அரிய பொக்கிஷமாக வருகிறார். அடிமட்ட தொண்டனாக தொடங்கி, 50 ஆண்டு கால அரசியல் பாரம்பரியத்தோடு உழைப்பால் உயர்ந்து, பொதுவாழ்வில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, அப்பழுக்கற்ற தலைவர் வருகிறார். தலைவர் கலைஞருக்கு பிறகு தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ்மொழியை காப்பாற்றவும் போராட்ட களம் காண வருகிறார். கொள்கை பிடிப்பையும், லட்சியத்தையும், உழைப்பையும் மதிக்கிற, பேணி காக்கிற லட்சியத்தலைவராக, மக்கள் தான் நம் எஜமானர்கள் என்று, மக்களுக்காகவே பாடுபடுகிற ஆற்றல், துணிவு மிக்க தமிழின தலைவராக, தென்னகத்து சூரியனாக மு.க.ஸ்டாலின் வருகிறார். கழகத்தை அவருடைய தலைமையில் அரியணை ஏற்ற சூளுரை ஏற்போம். வாருங்கள் களம் காண்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்றிரவு மாவட்ட எல்லையான தலை வாசலில், திமுக தலைவர் மு.க.ஸ்டா லினுக்கு, டி.எம்.செல்வ கணபதி உற்சாக  வரவேற்பளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏத்தாப்பூர் அன்பழகன், ஆத்தூர் நகர துணை செயலாளர் ராமச்சந்திரன், தம்மம்பட்டி கணேசன், கெங்கவல்லி முன்னாள் பேரூர் செயலாளர் ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் சரோஜா அண்ணாதுரை, வக்கீல் ராஜேஷ்கண்ணா, நகர துணை செயலாளர் பத்திரம் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், காட்டுக்கோட்டை சின்னையன், ஒன்றிய பொறுப்பாளர் மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜவேலு, சின்னதம்பி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் சரவணன், மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், பல்சர் சீனிவாசன், வெள்ளாளப்பட்டி முன்னாள் தலைவர் மூர்த்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: