திருட்டு வழக்கு: 9 பேரிடம் போலீஸ் விசாரணை

காலாப்பட்டு, செப். 18:  கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக 9 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டுகளும் அடிக்கடி நடந்து வந்தன. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.இந்நிலையில் நேற்று அதிகாலை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு போன்றவை குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் 6 பேருக்கு இச்சம்பவங்களில் தொடர்பில்லை என தெரியவந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதியுள்ள 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.திருட்டு வழக்கு தொடர்பாக ஒரே நேரத்தில் 9 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: