100 ஆண்டுகளை கடந்து இயங்கும் ரிஷிவந்தியம் அரசு உருது பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி, கூடுதல் ஆசிரியர்கள்

விழுப்புரம், செப். 18:  ரிஷிவந்தியம் அரசு உருது பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியும், கூடுதல் ஆசிரியர்களையும் நியமிக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரிஷிவந்தியத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி (முஸ்லிம் உருது) கடந்த 105 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது இந்த பள்ளியில் உருது ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. பள்ளியில் தற்போது 10 மாணவர்களே பயின்று வருகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எங்களை அணுகி பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள், இல்லையென்றால் பள்ளியை அரசு மூடிவிடும் அபாயம் உள்ளதாக கூறினார். ஊர் ஜமாத்தை கூட்டி பேசும்போது பெற்றோர்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். உருது ஆசிரியர் இல்லை. ேமலும் எங்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில் ஆங்கிலவழி படித்து வருகின்றனர்.

தற்போது அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் சேர்த்தால் மாணவர்கள் மனநிலை தடுமாறி பிள்ளைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்றும், உருது, தமிழோடு ஆங்கில வழி கல்வியும் சேர்த்து, ஆசிரியர்களையும் நியமித்தால் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயாராக உள்ளதாக கூறினர். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிலேயே ஆங்கில வழி கல்வியில் சேர்த்து படிக்கவும், மாணவர்களின் கல்வித்

தரம் உயர இரண்டு ஆசிரியர்களை நியமித்து எங்களது பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: