இவ்வாறு அவர் பேட்டியளித்தார். தூத்துக்குடி கோ ஆப் டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

தூத்துக்குடி, செப். 18: தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி வஉசி கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர்  சந்தீப் நந்தூரி துவக்கிவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு கோ- ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும்  சிறப்பு தள்ளுபடியில் விற்பனை நடக்கிறது. இதில் தூத்துக்குடியில் ரூ.1.95 கோடியில்  விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள 3 விற்பனை நிலையங்களிலும் சேர்த்து 3.05 கோடிவிற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

 முதல் விற்பனையை சுப்பையா வித்யாலயம் பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல்  பெற்றுக்கொண்டார்.  கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் இசக்கிமுத்து மற்றும் மேலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், ரெடிமேட்  சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்திசேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்தஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமான ரகங்கள் விற்பனைக்காக தருவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: