×

தூத்துக்குடியில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி,செப்.18: அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை; அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று (18ம் தேதி) மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்பி, மாநில பேச்சாளர்கள் சுப்பையா பாண்டியன், நெல்லை கபாலி மற்றும் தலைமை நிர்வாகிகள் பேசுகின்றனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை  நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags :
× RELATED கோவில்பட்டியில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள்