உடுமலை, மடத்துக்குளத்தில் 333 விநாயகர் சிலை வைக்க அனுமதி

உடுமலை, செப். 12: விநாயகர் சதுர்த்தி நாளை (13ம்தேதி) கொண்டாடப்படுவதையொட்டி, இந்து இயக்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.உடுமலை டிஎஸ்பி சரகத்தில், இந்து முன்னணி, அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி, விஎச்பி, பாரதிய ஜனதா உள்ளிட்டவை சார்பில் சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது.

இதில், உடுமலையில் 94, குடிமங்கலத்தில் 72, மடத்துக்குளத்தில் 38, கொமரலிங்கத்தில் 46, தளியில் 34, அமராவதியில் 19, கணியூரில் 30 என மொத்தம் 333 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவி

த்தனர். இந்து முன்னணிக்கு அதிகபட்சமாக 250 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: