சுவர் கட்ட தோண்டிய பள்ளத்தால் பனைமரங்கள் விழும் அபாயம்

காங்கயம், செப். 12: நத்தக்காடையூர் அருகே நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பாதியில் நிற்பதால், 75 ஆண்டு பழமையான பனைமரங்கள் கீழே விழும் அபாயத்தில் உள்ளன. ஈரோடு-பழனி நெடுஞ்சாலையில் நத்தக்கடையூர் அருகே சாலைக்காட்டு பகுதியில் அபாய வளைவு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து வந்தது. இதனால், இப்பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து, கடந்த வாரம் சாலையை அகலப்படுத்தி நடுவில் தடுப்பு வைக்கப்பட்டது. இதில், தடுப்பு சுவர் சாலையை விட கீழே உள்ளதால், வளைவில் திரும்பும் போது, ரோடு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும் இந்த பள்ளத்தை 75 வருட பழமையாக பனை மரங்கள் உள்ள இடத்தில் தோண்டியதால் மரங்கள் வழுவிழந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரத்தை பாதுகாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: