ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், செப். 12: திருப்பூர்  மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை  ஏமாற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி,  தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று  முற்றுகையிட்டனர்.  இதனை தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் காங்கயம்  பாலசமுத்திரம்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்டத்தில், சுமார் 300 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

கடந்த  2017 ஏப்ரல் 20 முதல் 26 ம் தேதி வரையிலும், 2017 அக்.12 முதல் 18 வரை  வேலை செய்ததற்கு கூடுதலான தொகை பெற்றுள்ளதாக கூறி, சம்பள தொகையை திருப்பி  செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.இல்லையெனில், வேலை கொடுக்க முடியாது  என்று ஊராட்சி செயலாளர் எப்சிபா கூறியது தொழிலாளர்களுக்கு பெறும்  அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.  எனவே, கலெக்டர் தலையிட்டு ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: