×

ரோஜா பூங்காவில் செயற்கை நிரூற்று சீரமைப்பு பணி துவக்கம்

ஊட்டி,  செப். 12: ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துைற  கட்டுபாட்டில் உள்ள ரோஜா பூங்கா உள்ளது. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகளை  மகிழ்விக்கும் வகையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்களில் 30  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர் செடிகள் உள்ளன. மேலும் ஆபூர்வமான அரிய  வகை பச்சை வண்ண ரோஜா மலர் செடி, ஊதா நிற ரோஜா செடியும் உள்ளன.  இந்நிலையில்  கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பெய்த மழை  காரணமாக ேராஜா பூங்காவில் உள்ள மலர் ெசடிகளில் பூக்கள் உதிர்ந்தும்,  அழுகியும் காணப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கு தயார் செய்யும்  வகையில் அழுகிய மலர்களை பூங்கா ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள். இதனிடைேய  கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயிலான காலநிலை நிலவிய நிலையில் ரோஜா  செடிகளில் மீண்டும் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.

 தற்போது இரண்டாவது  சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். இதனை  தொடர்ந்து ரோஜா பூங்காவிற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும்  வகையில் பூங்காவில் உள்ள நீருற்று சீரமைத்து சரி செய்யும் பணிகளில் பூங்கா  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தற்போது பூக்கள் பூக்க துவங்கியுள்ள  நிலையில் ஓரிரு வாரங்களில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்து குலுங்கும்.  இரண்டாவது சீசனுக்கு வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் என  தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.




Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி