×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அழைப்பு

கோத்தகிரி,செப்.12:  கோத்தகிரி தாசில்தார் ரவிக்குமார் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்க அடுத்த மாதம் 31ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர தகுதியானவர்கள்.இவர்கள் வரும் 8 மற்றும் 23ம் தேதிகளிலும், அடுத்த மாதம் 6 மற்றும் 13ம் தேதிகளிலும் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்கள் அல்லது குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கலாம். மேலும் வருகிற 9,23 மற்றும் அடுத்த மாதம் 7,14 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாமிலும் விண்ணப்பங்களை அளித்து பயன் பெறலாம்.

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்