சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி கைது

கள்ளக்குறிச்சி, செப். 12: சின்னசேலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்துள்ள பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் ராஜேந்திரன் (46), மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுமியிடம் ஆசையாகப்பேசி தனது வீட்டுக்கு டிவி பார்க்கலாம் வா என அழைத்துச்சென்றுள்ளார். அங்கு டிவியை அதிக சத்தத்தில் வைத்துவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்துவிட்டார். பின்னர் அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதுபற்றி அவரது தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: