டாஸ்மாக் கடை திறப்பு போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை

விழுப்புரம், செப். 12: விழுப்புரம் சாலாமேட்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடந்து வருகிறது.விழுப்புரம் சாலாமேடு பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரண்டு கடைகளும் மூடப்பட்டன.இதனிடையே தற்போது சாலாமேடு ரயில்வே கேட் உள் பகுதியில் குடியிருப்பு இல்லாத பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அங்கு குடியிருப்பு ஏதும் இல்லாத நிலையில் சிலர் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் டாஸ்மாக் கடை வேண்டும் என பெண்களும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிருக்கிறது. இதனால் வீடு திரும்பமாட்டார்கள். எனவே குடியிருப்புக்கு ஒதுக்குப்புறமாக இந்த கடை செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இருதரப்பினர் மோதல் சூழல்நிலை ஏற்பட்டதால் தற்காலிகமாக கடை மூடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முதல் கடை செயல்படத் தொடங்கியது. பிரச்னை ஏதும் ஏற்படாத நிலையில் டாஸ்மாக் கடை செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க அங்கு இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை மேலாளர் மணிவண்ணன் தலைமையில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் கடையில் உள்ளனர். தற்போது அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட போதும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Related Stories: