சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்

திருக்கோவிலூர், செப். 12: திருக்கோவிலூர் அடுத்த கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி(16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாரி மகன் பிரகாஷ்(19) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர் திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட சிவகாமியையும், அவரை கடத்தி சென்ற பிரகாஷையும் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம், செப். 12: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் அடிப்படை வசதி கேட்டு வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய் இருந்தும் தண்ணீர் வராமல் உள்ளது. மேலும் வகுப்பறையில் மாணவர்கள் உட்காருவதற்கு தேவையான நாற்காலிகள், பெஞ்ச் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. ேமலும் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது, என மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.  

கல்லூரியில் அடிப்படை வசதிகளை கேட்டு மாணவ, மாணவிகள் நேற்று காலை கல்லூரிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகல் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், கல்லூரிக்கு உட்கட்டமைப்பு வசதிக்கு அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தவில்லை. இந்த நிதியில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் எங்களுக்கு குடிநீர் வசதி கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்,என்றனர்.

Related Stories: