குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடி கைது

விழுப்புரம், செப். 12: கோட்டக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் மணவாளன்(26). இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மணவாளனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணவாளனை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: