புதுவையில் பூக்கள் விலை எகிறியது

புதுச்சேரி, செப். 12:  முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் பூக்கள் விலை கிடுகிடுவென எகிறியது. ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கு விற்றது.  புதுவை பெரிய மார்க்கெட்டுக்கு திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இன்று (12ம் தேதி) முகூர்த்த நாள், நாளை விநாயகர் துர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி ஒரு கிலோ மல்லி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்றது, நேற்று ரூ.1000க்கு எகிறியது.

அதேபோல், அரும்பு ரூ.800க்கும், ரோஜா ரூ.240க்கும், சம்பங்கி ரூ.500க்கும், சாமந்தி ரூ.240, கோழிகொண்டை ரூ.40க்கும் விற்பனை ஆனது.  இருப்பினும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றனர். இது குறித்து பெரிய மார்க்கெட் பூ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், பூக்களின் வரத்து குறைவாலும், முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து நாட்கள் வருவதாலும் விலையேற்றத்துக்கு காரணம் என்றார்.

Related Stories: