ஜனநாயகத்துக்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார்

புதுச்சேரி, செப். 12:    இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் ராஜாங்கம், லெனினிஸ்ட் கம்யூ., பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை அறிவித்துள்ளது. சர்வாதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழித்த 4 ஆண்டு கால மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

Advertising
Advertising

 இதற்கு ஆதரவு தெரிவித்த வணிகர்கள், கல்வி நிறுவனத்தினர், போக்குவரத்து துறையினர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.ஆனால், முழுஅடைப்பு போராட்டத்துக்கு எதிராக அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்த கவர்னர் கிரண்பேடியின் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: