அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

காரைக்கால், செப். 12:    காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில், மாவட்ட தேர்தல் துறை அதிகாரியும், கலெக்டருமான கேசவன் அறிவுறுத்தலின்படி, தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டு தேர்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் பதிவு அதிகாரி முத்து முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியின் தேர்தல் கல்விக்குழுவை தொடங்கி வைத்தார்.  முகாமில், 2018-19ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு இளநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பை சார்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து

கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும், அதற்கு எப்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய செய்முறையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  

மேலும், உதவி தேர்தல் பதிவு அதிகாரி முத்து,  மாணவர்கள் எப்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பதை விளக்கினார். மாணவர்கள் 01-.-01-.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.  நிகழ்ச்சியில், வேளாண் கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான மோகன் கலந்துகொண்டு வாக்குப்பதிவின் முக்கியத்துவம், தேர்தல் விழிப்புணர்வு, வாக்காளர் இணையதள பதிவுமுறை உள்ளிட்ட செய்முறை பயிற்சி கொடுத்து, மாணவ, மாணவியர்களின் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விடையளித்தார்.

Related Stories: