மாவட்டத்தில் 255 மி.மீ., மழை பதிவு ஏற்காட்டில் கடும்குளிர்

சேலம், செப்.12:சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 255 மிமீ மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரங்களில் வானில் மழை வருவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், மழை பொழியாமல் ஏமாற்றி வந்தது. இதனிடையே இரு தினங்களாக ஒருசில பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவி, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 37.2 மிமீ மழை பதிவானது. அங்கு ெபய்த மழையால் கடும்குளிர் காற்று வீசியது. பலமான மேகமூட்டமும் இருந்தது. அதேபோல், சங்ககிரி 36.2 மிமீ, கெங்கவல்லி 35.4 மிமீ, காடையாம்பட்டி 33 மிமீ, ஓமலூர் 29.4 மிமீ, இடைப்பாடி 29 மிமீ, மேட்டூர் 29.8 மிமீ, தம்மம்பட்டி 13.4 மிமீ, ஆத்தூர் 10.4 மிமீ என மொத்தம் 255 மிமீ மழை பதிவானது. இதனிடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: