நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு குடிநீர், குளிர்பானம் விற்ற 2 கடைகள் மீது வழக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி

சேலம், செப்.12: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, புகார் செயலி புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோட்டீஸ்வரி தலைமையில், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இரண்டு கடைகளில், குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றது கண்டறியப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகள் 2011-ன்படி பொட்டலத்தில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக பொருட்களை விற்பது சட்டவிரோதமானது என்றும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தெரிவித்தார்.
Advertising
Advertising

Related Stories: