சிகிச்சை பெற்று திரும்பிய தாயாரை நலம் விசாரித்த முதல்வர்

இடைப்பாடி, செப்.12: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திருச்செங்கோட்டில் நடந்த திருமண விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்தார். அவரை கலெக்டர் ரோகிணி மற்றும் அரசு அதிகாரிகள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர், நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கார் மூலம் கோவை செல்லும் வழியில், தனது சொந்த ஊரான இடைப்பாடி அருகே நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது தயார் தவுசாயியம்மாளை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர், சுமார் அரை மணிநேரம் வீட்டிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து சென்னை செல்ல புறப்பட்டார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால், கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தவுசாயியம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து நேற்று காலை, கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Advertising
Advertising

Related Stories: