இவ்வாறு ேசதுராமகிருஷ்ணன் கூறினார். சுகவனேஸ்வரர் கோயிலில் நீதிபதி குழுவினர் ஆய்வு

சேலம், செப்.12: இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தங்கமணி கணேசன், சார்பு நீதிபதி ரவிச்சந்திரன் ஆகியோர், நேற்று சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோயிலுக்குள் சென்று பராமரிப்பு, சுகாதார வசதிகள் குறித்து கோயில் நிர்வாகிகள், குருக்களிடம் கேட்டறிந்தனர். அதை தொடர்ந்து கோயிலை சுற்றி பார்த்தனர். தங்கத்தேர் வைக்கப்பட்டிருந்த இடத்தையும் பார்வையிட்டனர். இதையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம், கோயிலில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா? கேட்டறிந்தனர். அப்போது, பக்தர்கள் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் எனவும், கோயில் யானை ராஜேஸ்வரி இறந்ததை தொடர்ந்து, கோயிலுக்கு யானை வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் கூறுகையில், ‘சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, கோயிலின் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் பக்தர்களின் குறைபாடுகளை கேட்டறிந்தோம். ஒரு சில பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். ேகாயிலுக்கு யானை கேட்டுள்ளனர். இந்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்,’ என்றார்.

Related Stories: