டீ கடைக்காரருக்கு கத்திக்குத்து

ேமட்டூர், செப்.12: கொளத்தூர் அருகே டீ கடைக்காரரை கத்தியால் குத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் அருகே கொசவன்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர்(23), டீ கடை வைத்துள்ளார். நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது பாலச்சந்திரன்(40), அவரது மகன்கள் அபினேஷ், அபிஷேக் ஆகியோர் சந்திரசேகரின் கடை முன்பு தகராறில் ஈடுபட்டனர். கடை முன்பு தகராறு செய்ய வேண்டாம் என, அவர் கூறியபோது, ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் மற்றும் அவரது 2 மகன்கள், சேர்ந்து சந்திரசேகரை கத்தியால் குத்தினர். மேலும், இதை தடுக்க வந்த சந்திரசேகரின் சித்தி லதாவை இரும்பு ராடால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர், லதா ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாலச்சந்திரன், அபினேஷ் ஆகியோரை கைது செய்தனர். இதில் அபிஷேக் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: