கீரைக்காரனூரில் மாரடைப்பால் இறந்த திமுக தொண்டர் குடும்பத்தாருக்கு ₹2 லட்சம் நிதி உதவி வழங்கல்

மேச்சேரி, செப்.12: மேச்சேரி அடுத்த கீரைக்காரனூரில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி  இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பால் உயிரிழ்ந்த தொண்டரின் குடும்பத்திற்கு உதவி தொகையாக ₹2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேச்சேரி அடுத்த கூனாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (42) முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகாள திமுகவில் உறுப்பினராக உள்ளார். கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து திமுகவின் சார்பாக ₹2 லட்சத்திற்கான  காசோலையை ராமசாமியின் மனைவி ரத்தினம்மாளிடம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் வழங்கினார். நிதி உதவியை பெற்றுகொண்ட அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட திமுக அவைத்தலைவர் கோபால், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், கூனாண்டியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜாகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: