பாப்பாரப்பட்டியில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மர்

ஆட்டையாம்பட்டி, செப்.12:  ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி காந்திநகர் பகுதியில் 22,000 வோல்ட் மின்னழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரான்ஸ்பார்மரில் அதிகப்படியான மின்னழுத்தம் வரும் போது பீஸ் போவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 3 பீஸ்கேரியர்களில் 2 பழுதாகி உள்ளது. இதில் நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ேநற்று காகம் ஒன்று ஒயரின் மீது உரசியதில் காகம் இறந்து தீப்பொறி பறந்து அருகில் இருந்த தறிக்கூடத்தில் நூலின் மீது விழுந்தது. இதனை கவனித்த தொழிலாளர்கள் தீயை உடன் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து மின் வாரியத்தினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின் அலுவலர் கூறுகையில், ‘மெயின் கம்பிகள் உரசிக்கொள்வதால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது டிரான்ஸ்பார்மர் பழுதாகவில்லை. அவ்வாறு இருந்தால் சரிசெய்யப்படும். மேலும் வீடுகளின் வெளியே எர்த் கம்பிகள் அமைக்க வேண்டும்,’ என்றார்

Related Stories: