ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலி

பாலக்காடு,செப்.12: பாலக்காடு மாவட்டம் சித்தூர் சோகநாஷினி ஆற்றின் கரையோரம் வசிப்பவர் கண்ணன் (52). ஓட்டல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் குளிப்பதற்காக அருகே உள்ள ஆற்றிற்கு சென்றார். ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சோகநாஷினி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு கண்ணன் பலியானார். சித்தூர் தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: