டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் அட்மிட்

கோவை, செப்.12: கோவை மாவட்டத்தில் கால நிலை மாறுபாட்டால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும், எலி காய்ச்சலுக்கு ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் கோவையை சேர்ந்த 4 பேரும், திருப்பூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: