ரேஷன் கடையை உடைத்து சர்க்கரை மூட்டையை தூக்கி சென்ற யானை

பெ,நா,பாளையம், செப்.12: கோவையை அடுத்த ஆனைகட்டியில் ரேஷன் கடை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, ரேஷன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த சர்க்கரை மூட்டையை வெளியே எடுத்து இழுத்து சென்றது.

சத்தம் கேட்டு  வன சோதனைச்சாவடியில் இருந்த ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தபோது மூட்டையிலிருந்த சர்க்கரையை  யானை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து பட்டாசு வெடித்து யானையை வனத்துறையினர் விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை அருகில் இருந்த தோட்டத்தில் தென்னை, வாழை மரங்களை அழித்துவிட்டு வனத்திற்குள் சென்றது.
Advertising
Advertising

Related Stories: