மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, செப். 12: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை நினைவு படுத்தும் வகையில் கடும் வெயில் நிலவி வந்தது.இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு 9 மில்லிமீட்டர், பெருந்துறை 10, கோபி 20, சத்தியமங்கலம் 42, பவானிசாகர் 12, பவானி 38, கொடுமுடி 3.4, சென்னிமலை 5, கவுந்தப்பாடி 24, அம்மாபேட்டை 10.8, கொடிவேரி 38, குண்டேரிப்பள்ளம் 4, வறட்டுப்பள்ளம் 7.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 15 மில்லிமீட்டர் ஆகும்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 101.32 அடியாகவும், வரத்து 3ஆயிரத்து 156 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: