மும்முனை மின் விநியோகத்தில் குளறுபடி

ஈரோடு, செப். 12: ஈரோடு மாவட்டத்தில் மும்முனை மின்சாரம் விநியோகத்தில் குளறுபடி நடைபெற்று வருவதால் நடவு பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கசிவினால் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து

வருகிறது. இதையடுத்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத பகுதிகளில் கூட கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாளாக மும்முனை மின்சாரம் விநியோகம் செய்வதில் மின்வாரியத்தினர் குளறுபடிகளை மேற்கொண்டு வருவதால் 3 மணி நேரம் கூட ஒரு நாளைக்கு மின்சாரம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் வறட்சியின் போது தடையற்ற மின்சாரம் விநியோகித்து வந்த நிலையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் மும்முனை மின்சாரம் விநியோகிப்பதில் கடந்த 10 நாளாக மின்வாரியத்தினர் குளறுபடி செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சரியான பதில் கொடுப்பதில்லை. தற்போது பாசனத்திற்கு திறக்கப்பட்ட பகுதிகளில் கசிவு நீர் கொண்டு நெல் நடவு பணிகள் தீவிரமாக நடை

பெற்று வரும் நிலையில் மின் தடையால் பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் செய்யாத நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள போதிலும் மின்தடை காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 18 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் விநியோகிக்க வேண்டும். மின் குளறுபடிகளை சரிசெய்யாவிட்டால் விவசாயிகளை திரட்டு மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறினர்.

Related Stories: