பணகுடி அருகே மண் அரிப்பு ஏற்பட்ட குளத்தில் சீரமைப்பு பணி தீவிரம்

பணகுடி,செப்.12: பணகுடி அருகே மண் அரிப்பு ஏற்பட்ட குளத்தில் சீரமைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பெரியகுளம்  பல இடங்களில் சுமார் 100 மீட்டர் அளவில் மண் சரிவு ஏற்பட்டு குளம் உடையும் அபாய நிலையில் இருந்தது. இதனால் குளத்தின் தண்ணீர் வேறு கண்மாய்க்கு திருப்பிவிட்ட   நிலையில் தற்போது அதை மணல் மூட்டைகளை கொண்டு சரிசெய்யும் பணி நடைபெற்று  வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை  உதவி பொறியாளர் சுபாஷ் கூறுகையில, ‘மழை காரணமாக லெப்பைகுடியிருப்பு ெபரியகுளக்கரையில் மண்அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் பாதிப்பு  ஏற்பட்டது.

தற்போது 1,300 மணல்மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி கடந்த  இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இப்பணி ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும்.  குளக்கரை வழியாக  ஜேசிபி வாகனம் செல்ல முடியாத நிலை இருப்பதால் பணியாட்கள் வரவழைக்கப்பட்டு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெறும் என்பதால் காலதாமதம் என்றார்.

Related Stories: