திசையன்விளையில் துணிகரம் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திசையன்விளை, செப்.12: திசையன்விளையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி வீட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.40ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை இட்டமொழி ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி கொம்பையா. இவரது மனைவி முத்தம்மாள் (65). கொம்பையா இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. மகன்  அண்ணாமலை வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முத்தம்மாள் மட்டும் தனியாக திசையன்விளையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு முத்தம்மாள் கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.40ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Related Stories: