ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

நெல்லை, செப். 12: தென்காசி விலக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 700 கிலோ ரேஷன் அரிசி 14 மூடைகளில் கட்டப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக ஆய்க்குடியை சேர்ந்த கருப்பசாமி மகன் அரவிந்த் (24) என்பவரை போலீசார்  கைது செய்தனர்.   

Related Stories: