ஆழ்வார்குறிச்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கடையம், செப்.12: கடையம் அருகே சிவசைலம் ஊராட்சி, பெத்தான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தில் உறிஞ்சிமடை பாசனத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,  அதனை அகற்ற வலியுறுத்தியும் ஆழ்வார்குறிச்சி  வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வேல்மயில், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முத்துராஜன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மேனகா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் வெங்கடேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்னும் நான்கு நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என உறுதியளித்ததை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஆழ்வார்குறிச்சி வருவாய்அலுவலர் அருள்ராஜ், ஆழ்வார்குறிச்சி விஏஒ, சிவசைலம் பஞ்சாயத்து கிளர்க் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து நிலத்தை கைப்பற்றினர்.
Advertising
Advertising

Related Stories: