கடையம் அருகே மகனுடன் இளம்பெண் மாயம்

கடையம்,செப்.12: கடையம் அருகே 4 வயது மகனுடன் இளம்பெண் மாயமானார். கடையம் அருகே புங்கம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் திவ்யா 27. இவருக்கும் பாவூர்சத்திரம் அடுத்துள்ள செட்டியூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சிவராமகிருஷ்ணனுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் ரோகித் என்ற மகன் உள்ளான். இந்த  நிலையில் கடந்த 9ம் தேதி பொன்திவ்யா தனது மகனை அழைத்து கொண்டு புங்கம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். மறுநாள் 10ம் தேதி தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக மகனுடன் காரில் சென்றார்.

ஆனால் பொன்திவ்யா கணவர் வீட்டிற்கு செல்லவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர்களை பற்றிய விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பொன்திவ்யா தம்பி கிறிஸ்டோபர் கடையம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertising
Advertising

மானூர்:  மானூர் அருகே இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் புதுப்பெண் மாயமானார். மானூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற புதுப்பெண் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இளம்பெண்ணின் தந்தை மானூர் போலீசில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் புதுப்பெண் மாயமான சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: