ஸ்டூடிேயாவை உடைத்து கேமரா, பிரிண்டர் கொள்ளை

தூத்துக்குடி, செப். 12: தூத்துக்குடியில் போட்டோ ஸ்டூடிேயாவை உடைத்து ரூ.1லட்சம் மதிப்பிலான கேமரா, பிரிண்டரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி  பண்டாரம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த அந்தோணி சேவியர் மகன் மரிய  செல்வகுமார் (35), இவர் சோரீஸ்புரம் ரோட்டில் நடத்திவரும் போட்டோ ஸ்டூடியோவை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூட்டிச்சென்றார். நேற்று காலை  திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு பதறினார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த கேமரா,  பிரிண்டர் ஆகியன மர்ம நபர்களால் கொள்ளை போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு  ரூ.1லட்சம்  ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


Related Stories: