மணல் திருடிய 8 பேர் கைது

குளத்தூர், செப். 12: குளத்தூர் அருகே வைப்பாறு ஆற்றில் மணல் திருடிய 8 பேரை கைதுசெய்த போலீசார், இரு லாரிகளையும், ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.ளத்தூர்  இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்ஐ ராமசுப்பு மற்றும் போலீசார் வைப்பாறு  கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். இதில் வைப்பாறு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த  ஜூலியட் ரெசின் (48), செல்வராஜ் (45), ரெஜீகுமார் (35), சந்திரகுமார்,  வைகுண்டத்தைச் சேர்ந்த சங்கர் (20) அனந்தமடம் பச்சேரியைச் சேர்ந்த  ஈஸ்வரமூர்த்தி, விஜய், நெல்லையை சேர்ந்த பிராங் (37) ஆகிய 8 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட இரு டாரஸ் லாரிகளையும், ஜேசிபி இயந்திரத்தையும்  பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான  8 பேரையும் விளாத்திகுளம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: